கடலூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ‘தமிழகம் மீட்போம்’ சட்டமன்றத் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் வடலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.
இதில், கடலூர் கிழக்கு மாவட்டசெயலாளரும் முன்னாள் அமைச்ச ருமான எம்ஆர்கே பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.
கடலூர் மக்களவை உறுப் பினர் ரமேஷ், புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் சரவணன், குறிஞ் சிப்பாடி ஒன்றிய செயலாளர் சிவக்குமார் உட்பட பல்வேறு நிர்வாகி கள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் காணொலிக் காட்சி மூலம் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:
கடல் சூழ்ந்த இந்த மாவட்டம், அடிக்கடி இயற்கை சீற்றம் காரண மாக தண்ணீரிலும், கண்ணீரிலும் மிதந்து வருகிறது. வள்ளலார் பிறந்த மாவட்டம். உலக புகழ் பெற்ற அண்ணாமலை பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு சிறப்புகளை கொண்டது. பல்வேறு திராவிட இயக்கத் தலைவர்களையும் உரு வாக்கிக் கொடுத்த மாவட்டம் இது.
இன்று (நேற்று). இந்த நாளுக்கு ஒரு சிறப்பு உண்டு 1920-ம் ஆண்டு நீதிக்கட்சி ஆட்சி அமைத்த நாள். கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தசுப்பராயலு ரெட்டியார் முதல்வ ராக பதவியேற்ற நாள். 100 ஆண்டு களுக்கு முன் இந்த நாளில் அது நடைபெற்றது. இதே நாளில் நடைபெறும் இந்தக் கூட்டத்திற்கும் சிறப்பு உண்டு.
சில நாட்களுக்கு முன் வெள்ளத்தை பார்வையிட நான் கடலூர்மாவட்டத்திற்கு வருகை தந்தேன். அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப் படும் கடலூர் மாவட்டத்திற்கு நிரந்தர தீர்வு வேண்டும் என யோசித்தேன். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இதற்கு நிரந்தர தீர்வு காணப்படும். இந்த மாவட்டம் அடிக்கடி பாதிக்கப்படுவது குறித்துவல்லுநரை கலந்து ஆலோசித் தேன். 7 மாவட்டங்களின் வடிகாலாககடலூர் மாவட்டம் உள்ளது. இந்தமாவட்டங்களில் மழை நீர் தென் பெண்ணையாறு, கெடிலம் ஆறு, மணிமுத்தாறு பரவனாறு வழியாக கடலில் கலக்கிறது. இதற்கு நிரந் தர தீர்வு வேண்டுமெனில் மழைநீர் வடிகாலில் சிறப்பு திட்டம் தேவை.
2011 முதல் தமிழகத்தை ஆட்சிசெய்யும் அதிமுக அரசு இதற்குஎன்ன செய்தது. நிரந்தர தீர்வு எதை யும் அந்த அரசு செய்யவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் இதற்கு நிரந்தர தீர்வு காணப்படும்.
கடலூர் துறைமுகம் அமைக்க 2017 ஆண்டு ரூ. 135 கோடி திட் டம் தீட்டப்பட்டது. அந்த திட்டம் கிடப்பில் உள்ளது. நாங்கள் ஆட்சியில் இருந்தபோது ரூ.100 கோடியில் மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதிமுக அரசு அதனை கிடப்பில் போட்டுள்ளது.
முதல்வர் பழனிசாமி முதலீட் டாளர்கள் விரும்பும் மாநிலமாக தமிழகம் உள்ளதாக கூறுகிறார். இது பச்சைப் பொய், தமிழகம் தொழில் துறையில் 14 வது இடத் தில் உள்ளது. இது மத்திய அரசு வெளியிட்ட பட்டியல் விவரம். திமுகஆட்சியில் இருந்தபோது மூன்றா வது இடத்தில் இருந்தது. அதிமுகஆட்சியில் மக்களைப் பற்றி கவலையில்லை. வரும் தேர்தலில் இந்த கூட்டத்தின் ஆட்டம் முடிவுக்கு வரும் என்றார்.
முன்னதாக பேசிய கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், “கடலூர் மாவட்டத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் 9 தொகுதிகளிலும் திமுகவை வெற்றி பெறச் செய் வோம். மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும்; அப்போது கடலூரில் அடிக் கல் நாட்டப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரியை, அதே இடத்தில் கட்டித் தர தலைவர் ஸ்டாலின் உறுதி கூற வேண்டும்” என்றார்.
இந்நிகழ்வில், திமுகவின் மூத்தஉறுப்பினர்கள், கட்சிக்காக உழைத்து உயிர்நீத்தவர்கள் என 628 பேருக்கு பொற்கிழிகள் வழங்கப்பட்டன.
கடலூர் கிழக்கு மாவட்டத்தில் 106 இடங்கள், மேற்கு மாவட்டத்தில் 105 இடங்கள் என மொத்தமாக 211 இடங்களில் இத்தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago