தமிழகத்தில் புதியதாக தொடங்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவக் கல்லூரிகளில் நடப்பாண்டிலேயே மாணவர் சேர்க்கை கிருஷ்ணகிரி எம்பி கோரிக்கை

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் புதியதாக தொடங் கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவக் கல்லூரி களிலும் நடப்பு கல்வி யாண்டிலேயே மாணவர் சேர்க்கையைத் தொடங்க வேண்டும் என கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினர் செல்ல குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் 100 மற்றும் 150 எம்பிபிஎஸ் இடங்கள் மட்டும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில், தலா 250 எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் இடங்களாக உயர்த்த தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்கள் நிகழாண்டில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புக்கான மருத்துவக் கனவு நனவாகும்.

மேலும், தற்போது தமிழகத்தில் புதியதாக அறிவிக்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டிட கட்டுமானப் பணி நடந்து வருகிறது.

இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கையைத் தொடங்கினால் 1200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் எம்பிபிஎஸ் படிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். இக்கல்லூரிகளின் கட்டுமான பணிகள் முழுமை பெறாத நிலையில், அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைகளில் மருத்துவப் படிப்புக்கான கல்லூரி வகுப்புகளை தற்காலிகமாக நடத்தலாம்.

இதனால் கிராமப்புற ஏழை மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர முடியும். எனவே, இந்த கல்வியாண்டிலேயே 11 மருத்துவ கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கையை தொடங்க தேசிய மருத்துவ ஆணையத்தை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்