கிருஷ்ணகிரி அருகே 30 கிராமங்களுக்கு ரூ.40 லட்சம் செலவில் குடிநீர் வழங்கும் திட்டப் பணி தொடக்கம்

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி அருகே 30 கிராமங்களுக்கு, ரூ.40 லட்சம் செலவில் குடிநீர் வழங்கும் திட்டப் பணியினை செங்குட்டுவன் எம்எல்ஏ., தொடங்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பெல்லம்பள்ளி, பூவத்தி, ஆலப்பட்டி ஆகிய 3 ஊராட்சிகளில் உள்ள 30 கிராமங்களில் கடும் வறட்சியால் குடிநீர் தடடுப்பாடு இருந்து வந்தது. இதை போக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். 1300 அடி ஆழத்துக்கு ஆழ்துளைக் கிணறு அமைத்தும் குடிநீர் கிடைக்கவில்லை.

இதையடுத்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், எம்எல்ஏவுமான செங்குட்டுவன், தனது சொந்த பணத்தில் இருந்து ரூ. 40 லட்சம் மதிப்பில் 3 ஊராட்சிகளில் உள்ள 30 கிராமங்களுக்கு பொதுமக்களின் பங்களிப்போடு, தென்பெண்ணை ஆற்றில் இருந்து பாலிகானூர் வரை பள்ளம் தோண்டி குழாய் அமைக்கும் பணியினை பெல்லம்பள்ளியில் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், திமுக மாநில விவசாய அணி துணைத் தலைவர் மதியழகன், துணை செயலாளர் டேம் வெங்கடேசன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் நாகராஜ், சாவித்திரி கடலரசுமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தசாமி, கோவிந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்