திருவண்ணாமலை மாவட்டத் தில் 23 இடங்களில் அம்மா மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டுள்ள தாக அமைச்சர் சேவூர் எஸ்.ராமச் சந்திரன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை மூலம் ‘முதல மைச்சரின் அம்மா மினி கிளினிக்’ திறப்பு விழா திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த அம்மாபாளையம் மற்றும் வண்ணாங்குளம் ஆகிய கிராமங் களில் நேற்று நடைபெற்றது. ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். மினி கிளினிக்கை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் திறந்து வைத்து சிறப்புரை யாற்றினார்.
அப்போது அவர் பேசும்போது, “தி.மலை மாவட்டத்தில் 73 இடங் களில், முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் திறக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக 23 இடங்களில் திறக்கப்பட்டுள்ளன. காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை மினி கிளினிக் செயல்படும்” என்றார்.
இதில், சுகாதாரத் துறை துணை இயக்குநர்கள் மீரா (தி.மலை), அஜீதா(செய்யாறு) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, சேவூர் கிராமத்தில் ரூ.24 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள அம்மா பேருந்து நிலையத்தை அமைச்சர் திறந்து வைத்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago