சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மாணவர்கள் அரசு கட்டணம் வசூலிக்கக்கோரி 8-வது நாளாக போராட்டம்

By செய்திப்பிரிவு

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்து வக் கல்லூரி மாணவர்கள், அரசு கட்டணத்தை வசூலிக்கக்கோரி நேற்று 8-ம் நாளாக போராட்டம் நடத்தினர்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி கடந்த 2013-ம் ஆண்டு முதல் அரசு நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியை தமிழக அரசு ஏற்ற பிறகு மாணவரிடம் அரசு கல்லூரி கட்டணம் வசூலிக்காமல் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனை கண்டித்தும், அரசு கட்டணத்தை வசூலிக்கக் கோரி மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகள் நேற்று 8-வது நாளாக வாயில் கருப்பு துணி கட்டிகொட் டும் மழையில் குடை பிடித்தபடி தொடர்ந்து மாணவர்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் முழக்கமிடாமல் அரசுக்கு தங்கள் கோரிக்கைகளை அமைதியான வழியில் தெரிவித்தனர்.

இதுகுறித்து மருத்துவ மாண வர்கள் கூறுகையில், "எங்கள் கோரிக்கைகளை அரசுக்கு தெரிவிக்கும் விதமாக நூதன கவனஈர்ப்பு போராட்டங்களை நடத்திவருகிறோம்.

எங்கள் போராட்டத்தை இதுவரை அரசு கண்டு கொள்ள வில்லை. எனவே அரசு விரைந்து எங்கள் கோரிக்கைகளை ஏற்று நியாயம் வழங்க வேண்டும். இல்லையேல் தொடர் போராட் டங்கள் நடைபெறும்" என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்