ராசிக்கல், வைர வியாபாரம் செய்வதாகக் கூறி ரூ 1.77 கோடி மோசடி செய்த இருவர் கைது

By செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த கண வன் மனைவியிடம் ராசிக்கல், வைரவியாபாரம் செய்வதாகக் கூறி ரூ. 1.77 கோடி வாங்கி ஏமாற்றிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி, எம்என்ஆர் நகரைச் சேர்ந்தவர் மணி. இவரை, கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் கள்ளக்குறிச்சி துருகம் சாலையைச் சேர்ந்த செந்தில் என்பவர் தன் மனைவி செல்வியுடன் வந்து சந்தித்துள்ளார்.

ராசிக்கல், வைர வியாபாரம் செய்யப்போவதாகவும், அதற் கான பண உதவி செய்தால், 2 மாதங்களில் இருமடங்காக தருவதாகவும் கூறியுள்ளனர். தொடர்ந்து, அதே ஆண்டு மார்ச் மாதம் விழுப்புரத்தைச் சேர்ந்த ஜாஹீர் என்கிற தீன்பாய் என்பவரை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

அப்போது ஜாஹீர் மணியிடம்,என்னுடன் செந்தில் மற்றும் தென் காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே பெருமாள்பட்டி கிராமத் தைச் சேர்ந்த முருகன் என்கிற காளிராஜ் ஆகியோர் இந்த வியாபாரத்தில் ஈடுபடுவார் எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து மணி தன் வீட்டில் வைத்து ஜாஹீர், செந்தில், முருகன் என்கிற காளிராஜிடம் ரூ.7 லட்சம் கொடுத்துள்ளார். மேலும் ரூ.20 லட்சம் கொடுத்துள்ளார்.

தொடர்ந்து மணி தன் மனைவி அருள் செல்வி மூலம் தனது மாமனாரிடம் இருந்து ரூ. 50 லட்சம், உறவினர் சுமதியிடமிருந்து ரூ. 35 லட்சம், மற்றொரு உறவினரான ராமதாஸிடமிருந்து ரூ. 65 லட்சம் என ரூ. 1 கோடியே 77 லட்சம் பெற்றுகொடுத்துள்ளார்.

சில மாதங்களுக்குப் பின்,கொடுத்தப் பணத்தை மணியின்மனைவி அருள் செல்வி கேட்ட போது 3 பேரும் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. விழுப்புரம் குற்றப்பிரிவு போலீஸில் அருள் செல்வி புகார் அளித் தார்.

இப்புகாரின் பேரில் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் முருகன் என்கிற காளிராஜ், ஜாஹீர் ஆகியோரை நேற்று கைது செய்தனர். மேலும் தலைமறைவான செந்திலை தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்