ஆன்லைன் லாட்டரி மோசடியில் 17 பேர் கைது

By செய்திப்பிரிவு

விழுப்புரம் மாவட்டம் விக்கிர வாண்டி அருகே வா.பகண்டை கிராமத்தில் ஆன்லைன் சூதாட்டம் நடைபெறுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ண னுக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து ஏடிஎஸ்பி தேவநா தன் மேற்பார்வையில் டிஎஸ்பி நல்லசிவம் தலைமையிலான விக்கிரவாண்டி போலீஸார் வா.பகண்டையிலுள்ள அய்ய னாரப்பன் கோயில் அருகே திடீர்ஆய்வு செய்தனர். அங்கு கும்பலா கக் கூடி ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர்.

வாக்கூரைக் சேர்ந்த ராமகிருஷ்ணன் (36) தலைமையில் ஆன்லைனில் சூதாட்டத்தில் ஈடுபட்ட வா.பகண்டையைச் சேர்ந்த ரமணன் (36), தென்னரசு (40), சவுந்தர்ராஜன் (26), சக்தி (36), புஷ்பராஜ் (30), செங்காட்டு கிராமத்தைச் சேர்ந்த வினோத்ராஜ் (35), ஜெயமூர்த்தி, (40), விஸ்வரெட்டிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் (37). செய்யாத்து விண்ணான் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயசுந்தர் (40), மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் (35), கோவிந்தன் (37) , பிரபு (37), தட்சிணாமூர்த்தி (57) ஆகிய 14 பேரை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 14 செல் போன்கள் மற்றும் ரூ 2 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

இதே போல் மரக்காணம் அருகேசட்டவிரோதமாக ஆன்லைன் லாட் டரி சீட்டு விற்பனை செய்ததாக முருகன் (50), கணேஷ் (42), சுப்பிரமணியன் (49) ஆகியோர் மீதுமரக்காணம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.1,100 மற்றும் லாட்டரி சீட்டு கணக்கிடும் புத்தகம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட அனை வருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையி லடைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்