விழுப்புரத்தில் தேர்வுக்கு மாணவர் களை பள்ளிக்கு வரவழைக்க தனியார் பள்ளி சுற்றறிக்கை அனுப்பி யுள்ளது. இதுதொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்தார்.
கரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் தொடக்கப் பள்ளிகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. அரையாண்டு தேர்வுகளை பள்ளி கல்வித்துறை ரத்து செய்துள் ளது. தனியார் பள்ளிகள் மட்டும்,விருப்பம் உள்ள மாணவர்களுக்கு, இதுவரை நடத்தப்பட்ட பாடங்க ளுக்கு மட்டும் மாதிரி தேர்வு நடத்தி கொள்ள பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில் விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 3,4, 5- ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நேற்று முதல் 24-ம் தேதி வரை பள்ளியில் (ஆஃப் லைன்) தேர்வு நடைபெறும். மாணவர்கள் பள்ளிக்கு சீருடையில் வர வேண்டும்.
உடல் வெப்ப பரி சோதனைக்கு பின் மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று மாணவர்களின் பெற்றோர்களுக்கு செல்போனில் பள்ளி நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியது. நேற்று பலத்த மழை பெய்ததால், தேர்வு தள்ளி வைக்கப்படுகிறது. நாளை (டிச.18) அறிவித்தபடி தேர்வு நடைபெறும் என மீண்டும் பள்ளி நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பி யது.
இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியாவை தொடர்பு கொண்டு கேட்டபோது, "அப்பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட் டப்பட்டுள்ளது. அப்பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப் பப்படும்" என்று தெரிவித்தார்.
அப்பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டப்பட்டுள்ளது. அப்பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago