வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று 3-வது நாளாக காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
சிவகங்கை அரண்மனை வாசலில் கரும்பு ஏந்தி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் முருகன் தலைமை வகித்தார். இப்போராட்டத்தில் ஈடுபட்ட 335 பேரை சூலக்கரை போலீஸார் கைது செய்தனர்.
திண்டுக்கல்
திண்டுக்கல் மீனாட்சிநாயக்கன் பட்டியில் நடந்த காத்திருப்பு போராட்டத்துக்கு மாவட்ட விவ சாயிகள் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் லட்சுமணப்பெருமாள் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ரசூல்மைதீன் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி, மார்க்சிஸ்ட் மாநிலக்குழு உறுப்பினர் என்.பாண்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சிவகங்கை
சிவகங்கை அரண்மனை வாசல் முன் விவசாயிகள் கரும்பு ஏந்தி போராட்டம் நடத்தினர். முன்னாள் எம்எல்ஏ குணசேகரன், மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளர் வீரபாண்டி, மதிமுக மாவட்டச் செயலாளர் செவந்தியப்பன் தலைமை வகித்தனர்.
மதுரை
அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு சார்பில் மதுரை ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்தில் ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகள் எஸ்.பி.இளங்கோவன், கே.ராஜேந்திரன், பா.காளிதாஸ், ஜி.சந்தானம், டி.ரவீந்திரன், என்.பழனிச்சாமி ஆகியோர் தலைமை வகித்தனர். மூர்த்தி எம்.எல்.ஏ., இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் பா.காளிதாஸ் ஆகி யோர் பங்கேற்றனர்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago