ரஜினி, கமல்ஹாசன் பிரச்சாரம் செய்தாலும் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என அமைச்சர் ஜி. பாஸ்கரன் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் 62 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 26.44 லட்சம் மதிப்பிலான நவீன சக்கர நாற்காலி, காதொலிக் கருவி உள்ளிட்டவற்றை அமைச்சர் ஜி.பாஸ்கரன் வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது: சட்டத்தை மீறியதால், கமல்ஹாசனின் பிரச்சாரக் கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ரஜினி கட்சி தொடங்குவதால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அதிமுக தொண்டர்கள் வலுவாக இருப்பதால், ரஜினி, கமல் தேர்தலில் பிரச்சாரம் செய்தாலும் எங்களை பாதிக்காது என்றார்.
ஆட்சியர் பி.மதுசூதன், எம்எல்ஏ நாகராஜன், மாவட்ட ஊராட்சித் தலைவர் பொன்.மணிபாஸ்கரன், துணைத் தலைவர் சரஸ்வதி அண்ணா, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago