தேனி பி.சி.பட்டியில் போட்டித் தேர்வுகளுக்கான ஆல்மைட் பயிற்சி மையத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், தேனி எம்.பி. ரவீந்திரநாத் திறந்து வைத்தார்.
இவ்விழாவில் பங்கேற்ற துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், 30 அரசுப் பள்ளி ஏழை மாணவர்களுக்கு இலவச நீட் மற்றும் ஜேஇஇ-க்கான உத்தரவு களை வழங்கி அவர்களுடைய பயிற்சி செலவுகளை தானே ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார்.
தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் பயிற்சி மையத்தைத் திறந்துவைத்து சிறப்புரை ஆற்றினார்.
கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன், பாஜக மாநிலத் தலைவர் கரு.நாகராஜன் ஆகியோரும் விழாவில் சிறப்புரை ஆற்றினர். சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பேரன் ஷேக்சலீம், கொடைக்கானல் முன்னாள் நகர்மன்றத் தலைவர் குரியன் ஆபிரகாம், தேனி வனப்பாதுகாப்பு அலுவலர் கவுதம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஆல்மைட் அகாடமியின் சேர்மன் ராஜ்குமார் வரவேற்புரை ஆற்றினார். ராஜேஸ்வரி அழகணன், ரேணுகா ராஜன், புனிதவதி, விஜயராணி, சாந்தி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி முதல்வர் ஆறுமுகம், சென்னை சங்கர் பயிற்சி மைய நிர்வாகிகள் சந்திரன், பாஸ்கரன் ஆகியோர் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago