தொடர் உண்ணாவிரதம் இருந்ததால் உடல் நிலை சோர்வு வேலூர் அரசு மருத்துவமனையில் மீண்டும் முருகன் அனுமதி

By செய்திப்பிரிவு

தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் முருகனின் உடல் நிலை சோர்வடைந்ததால், வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனையில் நேற்று மீண்டும் அவர் அனுமதிக்கப்பட்டார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன் வேலூர் மத்திய சிறையில் கடந்த 29 ஆண்டுகளாக அடைக்கப் பட்டுள்ளார். இந்நிலையில், சிறையில் முருகனுக்கு வழங்கப் பட்ட சலுகைகளை சிறைத்துறை நிர்வாகம் ரத்து செய்தது.

இதனால், மனமுடைந்த முருகன் கடந்த மாதம் 23-ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட் டத்தை நடத்தி வருகிறார். சிறையில் அவருக்கு வழங்கப்படும் உணவுகளை தவிர்த்து வரும் முருகன், பழங்கள், தண்ணீரை மட்டும் எடுத்துக்கொள்கிறார். இருப்பினும், போதிய ஊட்டச்சத்து இல்லாததாலும், தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்பதால் முரு கனின் உடல் நிலை பாதிக்கப் பட்டது. இதைத்தொடர்ந்து, சிறைத் துறை மருத்துவர்கள் முருகனுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்தனர். மருத்துவர்கள் ஆலோசனைப்படி முருகனுக்கு சிறை யிலேயே 4 முறை குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. அதேநேரத்தில், முருகனின் உண்ணாவிரதப் போராட் டத்தை முடிவுக்கு கொண்டு வர சிறைத்துறை அதிகாரிகள் தொடர்ந்து முயற்சி எடுத்து வந்தனர்.

இந்நிலையில், 23-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து வரும் முருகனின் உடல் நிலை நேற்று முன்தினம் இரவு மோசமடைந்தது. இதையடுத்து, சிறைத் துறை மருத்து வர்கள் மற்றும் வேலூர் மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் யாஸ்மின் ஆகியோர் முருகனுக்கு மருத்துவப் பரிசோதனை செய்தனர். மருத்துவர்கள் ஆலோசனைப்படி முருகன் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் இரவு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த அரசு மருத்துவர்கள், குளுக்கோஸ் மட்டும் போதாது கட்டாயமாக உணவு எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர். ஆனால், முருகன் மருத்துவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்காததால் மீண்டும் சிறைக்கு திரும்பினார்.

இந்நிலையில், சிறைக்கு திரும்பிய சில மணி நேரங்களில் முருகனின் உடல்நிலை மீண்டும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று அதிகாலை முருகன் மீண்டும் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முருகனின் உடல் நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

அதேநேரத்தில் முருகன் நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர சிறைத்துறை அதிகாரிகள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்