மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது

By செய்திப்பிரிவு

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் விரோத சட்டங்களை திரும்பப்பெறக் கோரியும், மின்சார திருத்த மசோதாவை கைவிடக் கோரியும் டெல்லியில் 19-வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சூழ்நிலையில், விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க் காமல் பெரு நிறுவனங்களுக்கான அரசாக செயல்பட்டு வருவதாக கூறி, திருப்பூர் - அவிநாசி சாலை எஸ்.ஏ.பி. சந்திப்பு அருகே தனியார் பெரு நிறுவன துணிகள் விற்பனை மையத்தின் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று முற்றுகையிட்டு, மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட செயலாளர் செ.முத்து கண்ணன் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் கே.காமராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

அனுமதியின்றி ஆர்ப்பாட்ட்ம் நடைபெற்றதால், 19 பேரை 15-வேலம்பாளையம் போலீஸார் கைது செய்தனர்.

இதேபோல, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங் கிணைப்புக் குழுவின் திருப்பூர் மாவட்டம் சார்பில், இரண்டாவது நாளாக திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் எதிரில் காத்திருப்புப் போராட்டம் நேற்று நடைபெற்றது.

மார்க்சிஸ்ட், இந்தியக் கம்யூ னிஸ்ட், கொமதேக, மதிமுக, திமுக, பெரியாரிய உணர்வாளர்களின் கூட்டமைப் பினர் உட்பட பலரும் பங்கேற்ற னர்.

இதுதொடர்பாக 61 பேர் கைது செய்யப்பட்டு, மாலை விடுவிக்கப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்