காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் விபத்து பிரிவு, குழந்தைகள் நலப் பிரிவு, மகப்பேறு பிரிவு, எலும்பு முறிவு பிரிவு, கண் நோய் பிரிவு உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இந்த மருத்துவமனைக்கு வந்து செல்லும் நோயாளிகளிடம் அங்குள்ள சில ஊழியர்கள் கையூட்டு பெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில் காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனைக்கு வந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். கையூட்டு பெறும் ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது மருத்துவமனை கண்காணிப்பாளர் கல்பனா, நிலைய மருத்துவ அலுவலர் பாஸ்கர், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக அவைத் தலைவர் சி.வி.எம்.பி.சேகரன், நகரச் செயலர் சன் பிராண்ட் ஆறுமுகம் உட்பட பலர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago