கடந்த செப்டம்பர் 9-ம் தேதி விழுப்புரம் வருகை தந்த தமிழக முதல்வர் பழனிசாமி, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை கழகத்தின் மண்டல மையத்தை விழுப்புரத்தில் திறந்து வைத்தார்.
இப்பல்கலைக்கழகம் தமிழகம் முழுவதும் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, விழுப்புரம், நெல்லை, தருமபுரி, நீலகிரியில் 8 மண்டல மையங்களை நிறுவியுள்ளது. விழுப்புரம், கள்ளக் குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலம் ஆகி யவை விழுப்புரம் மண்டல மையத் தின் கீழ் வருகிறது.
நேற்று இப்பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் பார்த்தசாரதி, விழுப்புரம் மையத்தில் கையேட்டை வெளியிட்டு, ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் மண்டல இயக்குநர் பாண்டிய வடிவு, திட்ட அலுவலர் குண சேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் உள்ள 91 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தமிழ்நாடு திறந்தநிலைப் பல் கலைக்கழகத்தின் மையங்களாக செயல்பட்டு வருகின்றன.
பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் , தொழிலாளர்கள் ஆகியோருக்கு உயர் கல்வியை கொண்டு செல்லும் நோக்கத்தில் முதுகலை, முதுநிலைப் பட்டங் கள், இளநிலைப் பட்டம், பட்ட யம், தொழிற்கல்வி பட்டயம், குறுகியகால சான்றிதழ் படிப்பு உள்ளிட்ட படிப்புகள் இம்மை யத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago