சிதம்பரம் நடராஜர்கோயிலில் வரும் 21-ம் தேதி ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

By செய்திப்பிரிவு

சிதம்பரம் நடராஜர்கோயிலில் ஆருத்ரா தரிசன விழா குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் வரும் 21-ம் தேதி மார்கழி மாதஆருத்ரா தரிசன விழா கொடியேற் றத்துடன் தொடங்க உள்ளது. வரும் 29-ம் தேதி தேரோட்டம், 30-ம் தேதி தரிசன விழா நடை பெற உள்ளது. இந்த திருவிழா நடத்துவது தொடர்பாக சிதம்பரம் சார் - ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. சார் - ஆட்சியர் மது பாலன் தலைமை தாங்கினார்.

கரோனா தொற்று பரவல் தடுப்புநடவடிக்கை காரணமாக தேர் திருவிழா மற்றும் தரிசன விழாவை அதிக கூட்டம் இன்றி எப்படி நடத்துவது என ஆலோசனை நடத்தப்பட்டது. சார் ஆட்சியர் மதுபாலன் பேசுகையில், "மாவட்ட ஆட்சிய ருடன் கலந்தாலோசித்து தேர் திருவிழா சம்பந்தமாக இரண்டொருநாளில் முடிவு தெரிவிக்கப்படும்" என்று தெரிவித்தார்.

சிதம்பரத்தில் உள்ள அனைத்து தனியார் தங்கும் விடுதிகளில், விழாவையொட்டி முன்பதிவு செய்யக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள்விழாவில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். உள்ளூர் பக்தர்கள் மட்டும் அனு மதிக்கப்படுவார்கள் என தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்