திண்டுக்கல் வருமான வரி அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 200 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேளாண் திருத்தச் சட்டத்தைத் திரும்பப்பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் தமிழகத்தில் கட்சியினர், விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் நேற்று வருமானவரி அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டம் நடத்த மாவட்ட ஒருங்கிணைந்த விவசாயிகள் அமைப்பினர் முன் னாள் எம்.எல்.ஏ., பாலபாரதி தலைமையில் சென்றனர். அப்போது போராட்டத்துக்கு அனுமதியில்லை என்று கூறி போலீஸார் தடுத்தனர்.
இதையடுத்து தடையை மீறி வருமானவரி அலுவலகம் முன் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்த முயன்ற 200-க்கும் மேற்பட்டோரைக் கைது செய்தனர்.
பாலபாரதி கூறுகையில், திண் டுக்கல் மாவட்ட காவல்துறை போராட்டத்துக்குத் தொடர்ந்து அனுமதி மறுக்கிறது.
சட்டம் ஒழுங்குக்கு எந்தப் பங்கமும் ஏற்படாமல் போராட்டம் நடக்கும்போது அதை அனு மதிக்காமல் மறுப்பது ஏன்?
தென் மாவட்டங்களில் எங் குமே அனுமதி இல்லை என்று தென்மண்டல ஐ.ஜி., ஏன் பிடி வாதமாக இருக்கிறார் எனத் தெரியவில்லை. பா.ஜ.,கட்சியி னருக்கு ஒரு வகையான சலுகை காட்டப்படுகிறது. இது மிகவும் கண்டனத்துக்குரியது, என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago