வேளாளர் பெயர் பிரச்சினையால் போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில் அரசு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும், என கொமதேக தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக கொமதேக மாநில பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
7 சமுதாயங்களை ஒன்றிணைத்து, தேவேந்திரகுல வேளாளர் என்ற பெயர் கொண்டு அழைப்பதற்கு, தமிழக முதல்வர் பரிந்துரைப்பதாக அறிவித்த நாளிலிருந்து, தமிழகத்தில் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. தொன்று தொட்டு வேளாளர் பெயர் கொண்ட மற்ற சமுதாயத்தினர், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த முடிவின் விளைவால், பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது.
இதனால், தமிழகத்தில் மிகப்பெரிய கலவரம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. தங்கள் தரப்பு நியாயங்களை சொல்ல, வேளாளர் சமுதாய இயக்கங்கள் ஒன்றிணைந்து முதல்வரைச் சந்திக்க நேரம் கேட்டு கடந்த 10-ம் தேதி கடிதம் கொடுத்துள்ளனர். ஆனால், இதுவரை நேரம் ஒதுக்கப்படவில்லை. பிரச்சினையின் வீரியத்தை புரிந்து கொண்டு உடனடியாக வேளாளர் சமுதாய இயக்கங்களை அழைத்துப் பேசி, பிரச்சினைக்கு தீர்வு காண முதல்வர் முன்வர வேண்டும், எனத் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago