ஈரோட்டில் அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிலை திறப்பு விழா இன்று (16-ம் தேதி) நடக்கிறது.
ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் அதிமுக கட்சி அலுவலகம் மற்றும் பன்னீர்செல்வம் பூங்கா வில் ஜெயலலிதா சிலை அமைக்கப் பட்டுள்ளது. அதேபோல் அதிமுக அலுவலகத்தில் அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
சிலைகள் திறப்பு விழா இன்று (16-ம் தேதி) காலை 9 மணியளவில் நடக்கிறது. விழாவில், அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, கருப்பணன், உடுமலை ராதா கிருஷ்ணன், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளை திறந்து வைக்கின்றனர்.
தொடர்ந்து அதிமுக கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள 80 அடி உயர கம்பத்தில் கொடி ஏற்றி வைக்கின்றனர். மேலும், கட்சி அலுவலகத்தில உள்ள தகவல் தொழில்நுட்ப அலுவலகம் திறப்பு விழா நடைபெறுகிறது. இதனை கோவை மண்டல தகவல் தொழில்நுட்ப செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் திறந்து வைக்கிறார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை எம்.எல்.ஏ.க்கள் கே.வி. ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, சிவசுப்ரமணி ஆகியோர செய்துள்ளனர். சிலை திறப்பு விழாவில் பங்கேற்கும் நிர்வாகிகள் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் அரசு அறிவித் துள்ள கட்டுப்பாடுகளைப் பின்பற்றி பங்கேற்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago