இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் தொலைபேசி வழியாக வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம், ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதில் 52 அழைப்புகள் வரப்பெற்றன. பொதுமக்கள் பலர் நேரிலும் மனு அளித்தனர்.

சமூகநீதிக் கட்சி சார்பில் அளிக் கப்பட்ட மனுவில், "திருப்பூர் -காங்கயம் சாலையிலுள்ள மணியகாரம்பாளையம் பகுதியில் 20 ஆண்டுகளாக 30-க்கும் மேற்பட்ட பட்டியல் அருந்ததியர், பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் என அனைவரும் வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

வீடுகள் ஒதுக்க வேண்டும்

திருப்பூர் மாவட்ட ஆட்டோ ஓட்டுநர் பொது நலச் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில்,"எங்களுடைய சங்க உறுப்பினர் களுக்கு சொந்த வீடு மற்றும் நிலம்எதுவும் கிடையாது. அனைவரும் வறுமையான சூழலில், வாடகை வீட்டில்தான் வாழ்ந்து வருகிறோம். எங்கள் நிலை கருதி, அரசு கட்டியுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கித்தர வேண்டும்" என்று குறிப்பிட்டி ருந்தனர்.

அரசு நிலம் ஆக்கிரமிப்பு

மடத்துக்குளம் வட்டம் கணியூர் பொதுமக்கள் சார்பில் அளிக்கப்பட்ட மனு: எங்கள் பகுதியிலுள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளி நிர்வாகம், வருவாய்த் துறைக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளது. அதேபோல, மிகப்பெரிய ராட்சத குழிகள் தோண்டி வண்டல் மண் எடுத்துச் செல்கின்றனர். நிலத்தை ஆக்கிரமித்துள்ள பள்ளி மீதும், அரசு நிலத்தில் கொட்டப்பட்டுள்ள கல்குவாரிகளின் கழிவுமண், திடக்கழிவு குப்பையை வெளியேற்றி, நிலத்தடி நீர் வளத்தை பாதுகாக் கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மண் எடுத்துச் செல்பவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

நெல் கொள்முதல் நிலையம்?

உழவர் உழைப்பாளர் கட்சியின் மாவட்ட தலைவர் ஆர்.ஈஸ்வரமூர்த்தி அளித்த மனுவில், "தாராபுரம் வட்டத்தில் நடப்பு ஆண்டில் அமராவதி பாசனப் பகுதிகளில் சுமார் 15 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு, தற்போது புடை பருவத்தில் உள்ளது. வரும்பிப்ரவரி முதல் வாரம் அறுவ டைக்கு தயாராகி விடும். எனவேநடப்பாண்டில், தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழகம் மூலமாக தாராபுரம், அலங்கியம், தளவாய்ப்பட்டினம், செல்லாம்பாளையம், சத்திரம் ஆகிய இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்கி, கொள்முதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்