விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக திருப்பூரில் மறியலில் ஈடுபட்ட 158 பேர் கைது

By செய்திப்பிரிவு

டெல்லியில் போராடும் விவசாயிக ளுக்கு ஆதரவாக, அகில இந்தியவிவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் திருப்பூர் மாவட்டம் சார்பில், திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் எதிரில் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 98 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, "மாநில அரசின் உரிமைகளை பறிக்கின்ற வேளாண் சட்டங்களை, மாநில அரசு ஆதரிப்பது விவசாயிகளுக்கு இழைக்கும் துரோகம். விவசாயத்துக்கான இலவச மின்சாரம், வீடுகளுக்கான மின்சார சலுகை அனைத்தையும் பறித்து, மின்சாரத்தை கார்ப்பரேட் பெரும் நிறுவனங்களிடம் கொடுக்கமின்சார சட்ட திருத்தம் தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே, மேற்கண்ட சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். திருத்தங்கள் என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றக்கூடாது" என்றனர்.

மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ், கொமதேக, மதிமுக, திமுக உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட 16 பெண்கள் உட்பட98 பேர் கைது செய்து மண்டபத் தில் தங்க வைத்து மாலை விடுவிடுத்தனர்.

மனிதநேய மக்கள் கட்சி சார்பில்,திருப்பூர் ரயில் நிலையம் முன் நேற்று மறியல் போராட்டம் நடைபெற்றது. முன்னதாக, மாவட்ட தலைவர் நசீர்தீன் தலைமையில் விவசாயிகள்போல ஆடைகள் அணிந்தும், ஏர் கலப்பை மற்றும் மண் சட்டிகளுடன் பேரணியாக வந்து, ரயில் நிலையத்தின் உள்ளேசெல்ல முயன்றனர். வடக்கு காவல்நிலைய போலீஸார் அவர்களைதடுத்தி நிறுத்தினர். அப்பகுதியில்சாலைகளை மறித்து போராட்டம் நடைபெற்றது.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், 60 பேரை போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்