அவிநாசியை அடுத்த சேவூர் பகுதியில் தொழில் பூங்கா (சிப்காட்) அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபாலிடம் நேற்று பொது மக்கள் மனு அளித்தனர்.
கடந்த வாரம் சேவூர் அருகே தத்தனூர் ஊராட்சி பகுதியில் 846 ஏக்கரில் தொழில் பூங்கா அமைப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு தத்தனூர், புலிப்பார், புஞ்சை தாமரைக்குளம் உட்பட அருகில் உள்ள ஊராட்சிகள் மற்றும் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, தொழில்பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஊராட்சிகளில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில், மேற்கண்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், சட்டப்பேரவைத் தலைவரும், அவிநாசி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான ப.தனபாலிடம் நேற்று மனு அளித்தனர்.
மனுவைப் பெற்றுக் கொண்டு, சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் கூறும்போது, "பொது மக்களுக்கு இடையூறான திட்டங்கள் 99.9 சதவீதம் செயல் படுத்த அனுமதிக்கமாட்டோம்.
மக்களின் கோரிக்கை குறித்து சட்டப்பேரவையில் எடுத்துரைக் கப்படும்" என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago