சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் அரசு கல்லூரி கட்டணத்தை வசூலிக்கக் கோரி முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நடத்தினர்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியை தமிழக அரசு ஏற்ற பிறகும் மாணவர்களிடம் அரசு கல்லூரி கட்டணம் வசூலிக்காமல், அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதைக் கண்டித்து மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் தினமும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 6-வது நாளாக மருத்துவமனை முன்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஒன்று திரண்டனர். பின்னர் அரசு கட்டணம் வசூலிக்கக்கோரி கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தனர். இதைத்தொடர்ந்து முதல்வருக்குகடிதம் அனுப்பும் போராட்டத்தை நடத்தினர். அரசு கல்லூரிகளைப்போல கட்டணத் தையும் வசூலிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் முழக்கங்களை எழுப்பினர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவாக சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் நல சங்கத்தினர் நேற்று அண்ணாமலை நகரில் உள்ள ராஜேந்திரா சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்க பொதுச்செயலாளார் டாக்டர் ரவீந்திரநாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிக் கட்டணத்தைக் குறைக்க வேண்டு்ம் என்று முதல்வர் பழனிசாமிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago