எம்பிபிஎஸ், பிடிஎஸ் சேர்க்கைக்கான கலந்தாய்வு சென்னையில் நடக்கிறது. இதில் கடந்த 7-ம் தேதி பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வில் பரமக்குடி மாணவி ஒருவர் பங்கேற்றார். அவரது அழைப்புக் கடிதம், தரப் பட்டியலை சரிபார்த்தபோது அது போலி எனத் தெரிய வந்தது. நீட் தேர்வில் 27 மதிப்பெண் பெற்ற அந்த மாணவி 610 மதிப்பெண்கள் பெற்றதாக போலி சான்றிதழ் கொடுத்தது கண்டறியப்பட்டது.
இதுகுறித்து மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழு செயலாளர் செல்வராஜன் பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், மாணவி மற்றும் பல் மருத்துவரான அவரது தந்தை மீது பெரியமேடு போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பெரியமேடு போலீஸார் இருவர் நேற்று பரமக்குடி நேரு நகரில் உள்ள மாணவியின் வீட்டுக்கு வந்தனர். சம்பந்தப்பட்ட மாணவி மற்றும் அவரது தந்தை இன்று (டிச.15) சென்னை பெரிய மேடு காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென அழைப்பாணையை தந்து விட்டுச் சென்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago