தமிழகத்தைச் சீரமைக்கும் சீரிய பணியில் பெண்களின் பங்களிப்பு அதிகம் உள்ளது. எனவே பெண்கள் தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று தேனியில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் பேசினார்.
தேனி பழனிசெட்டிபட்டியில் உள்ள மண்டபத்தில் மகளிர், நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் கமல்ஹாசன் பேசியதாவது: மக்கள் நீதி மையத்தில் பெண்களுக்கு உரிய உரிமையும், பதவிகளும் வழங் கப்படும். அன்பு தங்கையாக, பாசமுள்ள அம்மாவாக உயிர் தோழியாக, இணை பிரியாத மனைவியாக சாதித்து வரும் பெண்கள் அரசியலிலும் சாதிப்பார்கள்.
வீட்டில் பெண்களுக்கு இல்லத் தரசி என்று கிரீடம் கொடுத்து விட்டு வெளியில் மரியாதை கொடுப்ப தில்லை. பெண்கள் நினைத்தால் ஆட்சியில் யாரையும் அமர்த்தலாம். எங்கள் கட்சியில் குறைந்தது 20 சாதனையாளர் பெண்கள் இருப்பார்கள். மற்ற கட்சிகளிலோ பெண்களுக்கு வாய்ப்பளிக்காமல் அரசியல் ஒரு சாக்கடை என்பார்கள். அரசி யலில் பெண்களுக்கும், இளைஞர் களுக்கும் வழி விடுங்கள். எங்கு கூட்டம் நடந்தாலும், எங்கள் கட்சியினர் அனைத்துக் குப்பைகளையும் எடுத்து குப்பைத் தொட்டியில் போடுவர். இதேபோல அரசியல் குப்பைகளையும் நாங் கள் தூய்மைப்படுத்துவோம். மக்கள் நீதி மய்யத்தின் குடும்பம் பெரியது என்றார்.
திண்டுக்கல்லில்...
திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று இரவு தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு வத்தலகுண்டு நகரில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பேச அனுமதி இல்லாததால் கை அசைத்து சென்றார்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago