100 நாள் வேலை திட்டத்தில் சம்பளம் குறைவாக வழங்குவதாக மக்கள் குறைதீர்வுக்கூட்டத்தில் 100 நாள் வேலை திட்ட தொழி லாளர்கள் நேற்று மனு அளித்தனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், நாட்றாம்பள்ளி, வாணியம்பாடி, ஆலங்காயம் மற்றும் ஆம்பூர் ஆகிய 5 இடங்களில் மக்கள் குறைதீர்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. திருப்பத் தூர் ஆட்சியர் அலுவலக கூட்ட ரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வுக் கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யா பாண்டியன், சார் ஆட்சியர் வந்தனாகர்க் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை வகித்தார். இதில், நிலப்பட்டா உட்பட 295 பொது நல மனுக்களை ஆட்சியர் சிவன் அருள் மற்றும் அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர்.
திருப்பத்தூர் அடுத்த மொள காரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், ‘‘மொளகாரன்பட்டி - திப்பண்ண வட்டம் இடையிலான 1,500 மீட்டர் தொலைவுள்ள தார்ச்சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. எனவே, பழுதடைந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்’’ என குறிப்பிட்டிருந்தனர்.
திருப்பத்தூர் அடுத்த குனிச்சி ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், ‘‘குனிச்சி ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பல்வேறு புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். எங்களுக்கு முறையான சம்பளம் வழங்கப் படவில்லை. குறிப்பாக, பெண் களுக்கு ஒரு மாதத்துக்கு 6 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 80 ரூபாய் மட்டுமே சம்பளமாக கணக்கிடப்பட்டு காலம் தாழ்த்தி வழங்கப்படுகிறது. இதை தட்டிக் கேட்டால் அடுத்த முறை வேலை இல்லை என ஊராட்சி செயலாளர் மிரட்டல் விடுக்கிறார். எனவே, முறைகேட்டில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என மனுவில் குறிப் பிடப்பட்டிருந்தனர்.
இந்நிகழ்ச்சியில், முதியோர் உதவித்தொகை 6 பேருக்கும், இயற்கை மரணம் நிவாரண நிதியுதவி 3 பேருக்கும், நிவர் புயலால் வீடுகளை இழந்த வாணி யம்பாடி பகுதியைச் சேர்ந்த 10 பேருக்கும் அரசின் நிவாரண உதவித்தொகையை ஆட்சியர் சிவன் அருள் வழங்கினார்.
நிகழ்ச்சியில், துணை ஆட்சியர் கள் அப்துல்முனீர், பூங்கொடி, அதியமான்கவியரசு, வட்டாட்சியர் கள் மோகன் (திருப் பத்தூர்), சுமதி (நாட்றாம்பள்ளி) உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago