வேலூர் மத்திய சிறையில் நடை பெறும் ஊழல், முறைகேடுகளை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்க முயன்றதால் முருகன் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது என வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை பெற்றுள்ள முருகன்,வேலூர் ஆண்கள் மத்திய சிறை யில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 20 நாட்களுக்கும் மேலாக உண்ணாவிரதம் இருந்து வரும் அவரது உடல்நிலையை மருத்துவக் குழுவி னர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், சிறையில் முருகனை சந்திக்க அவரது வழக்கறிஞர் புகழேந்தி நேற்று வேலூர் வந்தார். ஆனால், முரு கனை சந்திக்க அவருக்கு சிறை நிர்வாகம் அனுமதி அளிக்க வில்லை.
இது தொடர்பாக வழக்கறி ஞர் புகழேந்தி செய்தியாளர்களி டம் கூறும்போது, ‘‘முருகனுக்கு நேற்று (டிச.14) 4 பாட்டில் குளுக் கோஸ் ஏற்றப்பட்டுள்ளது. அவரது உடல் நிலை மிகவும் மோசமாகவும் நடக்க முடியாத நிலையில் இருப்ப தால் சந்திக்க முடியாது என சிறை நிர்வாகத்தினர் தெரிவித்தனர். அதே போல், பெண்கள் தனிச்சிறையில் உள்ள நளினியையும் சந்திக்கவும் எனக்கு அனுமதி அளிக்கவில்லை. முருகனின் உடல் நிலை குறித்து நளினிக்கு தெரியப்படுத்தக் கூடாது என்பதற்காகவே எனக்கு அனுமதி மறுக்கப் பட்டுள்ளது.
வேலூர் மத்திய சிறையில் முருகன் துன்புறுத்தப்பட்டு வருகிறார். முருகனின் உயிரை காப்பாற்ற தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறையில் உள்ள முருகன் மீது இரண்டு பொய் வழக்குகளை சிறை நிர்வாகம் தரப்பில் திட்ட மிட்டு போட்டுள்ளனர். இதன் மூலம் நளினி-முருகனின் விடுத லையை தடுக்க செய்யப்படும்சதியாகும். வேலூர் மத்திய சிறையில் நடைபெறும் ஊழல், முறைகேடுகளை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்க முருகன் முயன்றதால் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago