வேலூர் தோட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அமுதா (55). இவர், அதே பகுதியில் விறகு வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 1-2-2015-ம் ஆண்டு கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது, வேலூர் கொணவட்டத்தைச் சேர்ந்த முகமது கலீல் (39) என்பவர், கத்தி முனையில் அமுதாவை மிரட்டி அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றார்.
இதுகுறித்து, வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் அமுதா அளித்த புகாரின்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து முகமது கலீலை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை வேலூர் மகளிர் நீதிமன்ற நீதிபதி பாலசுப்பிர மணியம் முன்னிலையில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி, முகமது கலீலுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1,500 அபராதம் விதித்து உத்தர விட்டார். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் பி.மோகன் ஆஜராகினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago