கோட்டைக்குள் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி

By செய்திப்பிரிவு

வேலூர் கோட்டையை பார்வை யிட பொதுமக்களுக்கு 8 மாதங்களுக்கு பிறகு அனுமதி அளிக்கப்பட்டது.

நாடு முழுவதும் கரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் இறுதியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கடந்த ஜூன் மாதத்துக்குப் பிறகு படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில், சுற்றுலாத்தலங்கள் மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள வேலூர் கோட்டையில் பொது மக்கள் செல்ல அனுமதி அளிக் கப்படவில்லை. மேலும், கோட்டையில் உள்ள ஜலகண் டேஸ்வரர் கோயில் மட்டும், பக்தர்கள் தரிசனத்துக்காக திறக்கப்பட்டது. தொடர்ந்து, கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியத்தையும் பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், மத்திய அரசின் உத்தரவை அடுத்து, வேலூர் கோட்டையில் பொது மக்கள் பார்வையிட நேற்று முதல் அனுமதிக்கப்பட்டது. கோட்டை மதில் சுவர் பாதை இன்னும் திறக்கப்படாத நிலையில் கோட்டைக்குள் மட்டும் பொதுமக்கள் சென்றவர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்