புதூர் மாரியம்மன் கோயில் மண்டல பூஜை பால் குட ஊர்வலம்

By செய்திப்பிரிவு

போகனப்பள்ளியில் புதூர் மாரியம்மன் கோயில் மண்டல பூஜையையொட்டி பால் குடம் ஊர்வலம் நடந்தது.

கிருஷ்ணகிரி அடுத்த போகனப் பள்ளியில் எழுந்தருளியுள்ள புதூர் மாரியம்மன் கோயில், விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா கடந்த மாதம் 20-ம் தேதி நடந்தது. இந்த விழாவைத் தொடர்ந்து நேற்று மண்டல பூஜை நடந்தது. இந்த பூஜையினையொட்டி போகனப்பள்ளி அருகில் பால் குடங்கள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அங்கிருந்து, பம்பை, உடுக்கைமுழங்க, சேவாட்டம், காளிவேஷம் அணிந்தவர்களின் நடனத்துடன் பால் குடத்துடன் ஊர்வலமாக புதூர் மாரியம்மன், முத்துராயன், விநாயகர், பெருமாள் கோயில்களுக்குச் சென்றனர். அங்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தன. இந்நிகழ்ச்சியில் போகனப்பள்ளி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று அம்மன் தரிசனம் செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்