பிரதமரின் கிசான் திட்டத்தில் பயனடைந்த தகுதியான விவசாயிகளிடமும் பணத்தை திரும்பக் கேட்டு நிர்பந்தம் செய்வதாக தமிழக விவசாயிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து, தமிழக விவசாயிகள் சங்க தலைவர் ராமகவுண்டர் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
பிரதமரின் கிசான் நிதியுதவி திட்டம் மூலம் தகுதியான தமிழக விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் 3 தவணைகளாக ரூ.6000 செலுத்தப்பட்டது. இடையில், இந்த திட்டத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக புகார் கிளம்பியது. இது தொடர்பாக நடந்த விசாரணையில் தமிழகம் முழுக்க ரூ.160 கோடி திரும்பப் பெறப்பட்டுள்ளது. இந்நிலையில், இத்திட்டம் மூலம் நிதியுதவி பெற தகுதியான விவசாயிகளிடம் இருந்து தொகையை திரும்ப வழங்கக் கேட்டு மிரட்டப்படுகிறது. இதற்காக இனி அதிகாரிகள் வந்தால் விவசாய கிராமங்களில் கொந்தளிப்பு ஏற்படும். ஏழை விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நியாயமான பணத்தை திரும்ப கேட்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago