குண்டடத்தை அடுத்த உப்பாறுஅணைக்கு தண்ணீர் வழங்கவலியுறுத்தி, திருப்பூர் மாவட்டஉப்பாறு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில், உப்பாறு அணை அருகே 5-வதுநாளான நேற்று, வாயில் கறுப்புத் துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் கூறும்போது, "கடந்த 25 ஆண்டுகளாக உப்பாறு அணைக்கு தண்ணீர் கேட்டு போராடுகிறோம்.
விவசாயிகள் பலர் ஊரைகாலி செய்துவிட்டு திருப்பூர்,கோவை நகரங்களில் கூலித் தொழிலுக்கு சென்று வருகின்றனர். உப்பாறு அணையை நம்பிஉள்ள அரசூர் - தாளக்கரை வரை உள்ள 50 கி.மீ. நீளத்துக்கு,20 கரைகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளோம். விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆட்சியர் நிரந்தரத் தீர்வு காண வேண்டும்" என்றனர். நேற்று நடந்த போராட்டத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களோடு காங்கயம் எம்.எல்.ஏ.உ.தனியரசு, மக்கள் நீதி மய்யத்தின் மாவட்ட பொறுப்பாளர் பாலசுப்பிரமணியம் உட்பட பலர் பங்கேற்றனர். உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்க வலியுறுத்தி, 5-வது நாளான நேற்று வாயில் கறுப்புத் துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டோர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago