ரயில் மறியல் முயற்சி: 17 பேர் கைது

By செய்திப்பிரிவு

பாரம்பரிய உதகை மலை ரயில் சேவை தனியாரிடம்ஒப்படைக்கப்பட்டு, சிறப்பு ரயிலாக அறிவித்து ரூ.3 ஆயிரம்வீதம் கட்டணம் வசூல் செய்து சனி, ஞாயிறு ஆகிய இருநாட்களில் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்புதெரிவித்து பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்திவருகின்றனர். மேட்டுப்பாளையத்தில் இருந்து சிறப்புமலை ரயில், பிற்பகல் 1.30 மணிக்கு உதகை ரயில் நிலையம் வந்தது. அப்போது, தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, எஸ்டிபிஐ அமைப்பினர் மறியலில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து 17 பேர் கைது செய்யப்பட்டனர். அதன்பின்பு மலை ரயில் மீண்டும் மேட்டுப்பாளையம் நோக்கி புறப்பட்டுச் சென்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்