விழுப்புரத்தில் நேற்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சிஒன்றில் பங்கேற்க வந்த இந்து மக்கள் கட்சி யின் நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
ரஜினியின் ஆன்மிக அரசியலை நாங்கள் நிபந்தனையின்றி ஆதரிக்கிறோம். அதேநேரத்தில் இந்து மக்கள் கட்சியை ரஜினியின் கட்சியோடு இணைக்கும் எண்ணம் ஏதும் எங்களுக்கு இல்லை. தற்போது வேளாண் சட்டங்களை எதிர்த்து வரும் திமுக, இதே வேளாண் சட்டங்களை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கொண்டு வருவோம் என தேர்தல் அறிக்கையில் அறிவித்து விட்டு இப்போது அரசியலுக்காக எதிர்த்து வருகின்றனர்.
தி.மு.க., அ.தி.மு.க. இரண்டுமே ஊழல் கட்சி கள்தான். இதில் வேறுபாடு காண முடியாது. இதற்கு மாற்றாகத்தான் ரஜினி அரசியலுக்கு வருகிறார். ‘ஆன்மிக அரசியல்’ என்பது தந்தை பெரியாருக்கு மாற்று இல்லை என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்வார்கள் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago