நபார்டு வங்கி கடன் திட்ட அறிக்கை ராமநாதபுரம் ஆட்சியர் வெளியிட்டார்

By செய்திப்பிரிவு

நபார்டு வங்கி சார்பாக வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டார்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2021-22 ஆண்டுக்கான தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி (நபார்டு) வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையை ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டார்.

பின்னர் அவர் கூறியதாவது: மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிக் கிளைகளின் மூலம் 2021-22-ல் வளம் சார்ந்த கடன் இலக்கு ரூ.4706.78 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கு நடப்பு 2020-21 ஆண்டு இலக்கை விட 10.25 சதவீதம் அதிகமாகும்.

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க உற்பத்தியை பெருக்குதல், விவசாயத்தில் அடிப்படை கட்டுமான வசதிகளை மேம்படுத்துதல் ஆகிய வேளாண்மைப் பணிகளுக்கு அதிக அளவில் கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2021-22 ஆண்டில் வேளாண் பயிர்க்கடன் ரூ.3049.68 கோடி, வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த துணைத் தொழில்களுக்கான கடன் ரூ.351.19 கோடி, நுண், சிறு மற்றும் குறு தொழில்களுக்கான கடன் ரூ.193.11 கோடி, விவசாயக் கட்டமைப்புகள், ஏற்றுமதி, கல்வி, வீடு கட்டுதல் மற்றும் மீள்சக்தி ஆகியவற்றுக்கு முறையே ரூ.149.10 கோடி, ரூ.38 கோடி, ரூ.304 கோடி, ரூ.344 கோடி, ரூ.22.42 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்