சிவகங்கை மாவட்டத்துக்கான பெரியாறு பாசன கால்வாய்களில் தண்ணீர் திறப்பை நிறுத்திய பொதுப்பணித்துறை அதிகாரி களை கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.
சிவகங்கை மாவட்டத்தில் ஷீல்டு, லெசிஸ், 48-வது மடை கால்வாய், கட்டாணிப்பட்டி-1 மற்றும் 2 ஆகிய 5 நேரடி பெரியாறு பாசனக் கால்வாய்கள் மூலம் 6,748 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன. அதேபோல் பெரியாறு விஸ்தரிப்பு, நீட்டிப்புக் கால்வாய்கள் மூலம் 8 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இந்நிலையில் செப்.27-ம் தேதி ஒருபோக பாசனத்துக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் சிவகங்கை மாவட்டத்துக்கு தண் ணீர் திறக்கவில்லை.
இதைக் கண்டித்து விவசாயிகள் போராட்டம் அறிவித்ததை அடுத்து சிவகங்கை மாவட்டத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் சில நாட்களிலேயே நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து அமைச்சர் ஜி.பாஸ்கரன் முன் னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் தொடர்ந்து ஒரு மாதத்துக்குத் தண்ணீர் திறப்பதாக உறுதி அளித்தனர். ஆனால் முறையாக தண்ணீர் திறக்கவில்லை. அதன் பிறகு நவ.4-ல் மீண்டும்போராட்டம் நடந்தது. இதையடுத்து ஆட்சியரிடம் முறையாக தண்ணீர் திறப்பதாக அதிகாரிகள் உறுதிஅளித்தனர். அதன்படி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனிடையே ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் இட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் தண்ணீர் திறப்பு மீண்டும் நிறுத்தப்பட்டது.இந்நிலையில் அதிகாரிகளைக் கண்டித்து டிச.18-ல் ஒக்கூரில் சாலை மறியலில் ஈடுபடப் போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago