ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள புதுக்கோட்டை மலையடிவாரப் பகுதி தோட்டங்களில் புகுந்த காட்டுயானைகள் பயிர்களை சேதப்படுத்திச் சென்றன.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையடிவார கிராமமான புதுக்கோட்டையில் தென்னை, மக்காச்சோளம் அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு மலையடிவாரத்துக்கு வந்த காட்டுயானைகள் தென்னை மரங்களை சேதப்படுத்தி சாய்த்துவிட்டன. அதன் பின் மக்காச்சோளப் பயிர்களையும் சேதப்படுத்தின. அதிகாலைக்குள் காட்டுயானைகள் அங்கிருந்து மலைப் பகுதிக்குச் சென்றுவிட்டன.
பயிர்கள் சேதமடைந்தி ருப்பதைப் பார்த்த விவசாயிகள், இதுகுறித்து விருப்பாட்சி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சேதமடைந்த பயிர்களை பார்வையிட்ட வனத் துறையினர், இரவு நேரத்தில் தோட் டங்களில் யாரும் தங்க வேண்டாம் என அப்பகுதியினருக்கு அறி வுறுத்தினர்.
இப்பகுதி மக்கள் கூறுகையில், தோட்டப் பகுதிக்கு இரவு நேரங்களில் யானைகள் வந்து செல்வதால் தோட்டத்து வீடுகளில் தங்க அச்சமாக உள்ளது.
யானைகள் மலையடிவாரப் பகுதியிலுள்ள தோட்டங்களுக்கு வரவிடாமல் தடுக்க சூரிய மின்வேலி அமைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago