ஊதிய உயர்வு, பணி நிரந்தம் செய்ய வலியுறுத்தி கொடைரோடு அருகே தனியார் டிராக்டர் தொழிற்சாலை நிர்வாக ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கொடைரோடு அருகே மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் டிராக்டர் நிறுவனம் உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் கோரி தொழிலாளர் நல அலுவலர்களிடம் மனு அளித்தனர்.
இந்த மனுவை அளித்த 2 பேரை ஆலை நிர்வாகம் பணி நீக்கம் செய்தது. இதனால் அதி ருப்தி அடைந்த தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அடுத்த ஷிப்ட் பணிக்கு வந்த தொழிலாளர்களும் தொழிற்சாலைக்கு வெளியே போராட்டம் நடத்தினர். முறையாக ஊதிய உயர்வு வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தொழிற்சாலை நிர்வாகம் உற்பத்தியை நிறுத்தி உள்ளது. போராட்டத்துக்கு ஆதர வாக மார்க்சிஸ்ட் தொழிற்சங்க நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி ஆகியோர் தொழிலாளர்கள் மத்தியில் பேசினர். பேச்சுவார்த்தை நடத்த தொழிற்சாலை நிர்வாகம், அரசு அதிகாரிகள் யாரும் வராததால் போராட்டம் நேற்று இரவு வரை தொடர்ந்தது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago