அதிமுகவுக்கு வாக்களிக்க இளம் வாக்காளர்கள் ஆர்வம் அமைச்சர் ஆர்.காமராஜ் நம்பிக்கை

By செய்திப்பிரிவு

திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் சேர்க்கை முகாம்களில், வாக்காளர் சேர்க்கும் பணிகளை அதிமுகவினர் சரிவர செய்துள்ளனரா என அதிமுக மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான ஆர்.காமராஜ் நேற்று பல்வேறு இடங்களில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று பார்வையிட்டு, புதிய வாக்காளர்களை சந்தித்து பேசினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழகத்தில் தேர்தல் ஆணையம் நடத்தி வரும் புதிய வாக்காளர் சேர்க்கைக்கான 2-வது கட்ட முகாமில், புதிய இளம் வாக்காளர்கள் ஆர்வமுடன் தங்களின் பெயர்களை இணைத்து வருகின்றனர்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில், முதல்வர் பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு சிறப்பான முறையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.நோய்த் தொற்று, மழை வெள்ளப் பேரிடர் காலங்களில் தமிழக அரசு சிறப்பாக பணியாற்றி வருவதை மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இதுபோன்ற சிறப்பான செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்ட புதிய இளம் வாக்காளர்கள், அதிமுகவுக்கு வாக்களிக்கும் ஆர்வத்துடன் வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயரை சேர்க்க விண்ணப்பித்து வருகின்றனர் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்