கிருஷ்ணகிரியில் விடுதி காப்பாளர்களுக்கு பயிற்சி

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் விடுதி காப்பாளர்களுக்கு 2 நாள் பயிற்சி வழங்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்டத்திலுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின்கீழ் செயல்படும் விடுதிகளில் காப்பாளர் அல்லது காப்பாளினிகளுக்கு ‘காப்பாளர் நலன் மற்றும் மன அழுத்தம் மேலாண்மை’ என்ற தலைப்பின் கீழ் அண்ணா மேலாண்மை நிறுவனத்தின் மூலம் 2 நாள் பயிற்சி வகுப்பு நடந்தது. இதனை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அமீர்பாஷா, மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் சேதுராமலிங்கம் ஆகி யோர் தொடங்கி வைத்தனர். இப்பயிற்சியில் 50 காப்பாளர், காப்பாளினிகள் பங்கேற்றனர். பயிற்சியை அண்ணா மேலாண்மை நிறுவன இணை இயக்குநர் சின்னசாமி, பயிற்சியாளர்கள் ஞானசேகரன், தாமோதரன் ஆகியோர் நடத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்