கரூர் அதிமுக அலுவலகத்தில் மாநில போக்குவரத் துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியது:
கரூர் மாவட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் பலரது பெயர்கள் இரு இடங்களில் இடம் பெற்றுள்ளன. இதன் மூலம் மோசடியாக தேர்தலில் வெற்றி பெற திமுக திட்டமிட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் புதிதாக 30,000 பேரை சேர்க்க திட்டமிட்டுள்ளதாக திமுகவினர் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால், கரூர் தொகுதியில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க 6,000 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். மேலும், மாவட்டத்தில் 18,000 பேர் இறந்துள்ள நிலையில், 5,000 பெயர்கள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளன.
எனவே, வாக்காளர் பட்டியலில் இரட்டைப் பதிவுகள், இறந்தவர்களின் பெயர்களை நீக்க வேண்டும் எனக் கோரி தேர்தல் ஆணையத்திடம் முறையிட உள்ளோம். திமுக ஆட்சி காலத்தில் பலருக்கும் முறைகேடாக இலவச பஸ்பாஸ்கள் வழங்கப்பட்டன என தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago