சிறுபான்மையின மக்கள் தங்களது புகார் மற்றும் கோரிக்கை மனுக்களை தேசிய அளவில் பதிவு செய்ய, புதிதாக உருவாக் கப்பட்டுள்ள இணையதளம் முகவரியில் பதிவு செய்யலாம் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சீயர்கள் மற்றும் ஜெயின் பிரிவைச் சேர்ந்த மதவழி சிறுபான்மையின மக்கள் தங்களது புகார் மற்றும் கோரிக்கைகளை தேசிய சிறுபான்மையின ஆணை யத்தில் பதிவு செய்ய www.ncm.nic.in என்ற இணையதளம் (Online Complaint Management System for National Commission for Minorities) கடந்த ஜூன் மாதம் 1-ம் தேதி உருவாக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.
சிறுபான்மையினர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் இந்த இணையதளம் மூலம் தேசிய சிறுபான்மையினர் ஆணையத்திடம் தங்களது கோரிக்கைகள் மற்றும் புகார் மனுக்களை பதிவு செய்யலாம். புகார்கள் பதிவு செய்த பிறகு, தனித்துவமான அடையாள எண் (Unique ID Number) மூலம் தங்களின் புகார்கள் மற்றும் குறைகளின் நிலையை அறிந்துக்கொள்ள லாம்.
எனவே, திருப்பத்தூர் மாவட்டத்தில் வசித்து வரும் சிறுபான்மையின மக்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் மூலம் தங்களது கோரிக்கைகள் மற்றும் மனுக்களை பதிவு செய்து பயன்பெறலாம்’’ என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago