காவலர் பணிக்கு நாளை நடைபெறும் எழுத்து தேர்வில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 41,401 பேர் பங்கேற்கவுள்ளனர்

By செய்திப்பிரிவு

ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தில் 44 மையங்களில் நாளை நடைபெற உள்ள தமிழ்நாடு சீருடைப் பணிக்கான எழுத்துத் தேர்வில் 41 ஆயிரத்து 401 பேர் பங்கேற்க உள்ளனர்.

தமிழக சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் காவல் துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைகளில் காலியாக உள்ள காவலர் பணிக்கு 10 ஆயிரத்து 906 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு கடந்த செப்டம்பர் மாதம் வெளியான நிலையில் முதற்கட்ட நுழைவுத் தேர்வு நாளை நடைபெற உள்ளது.

இதில், வேலூரில் நடைபெற உள்ள தேர்வில் 22 ஆயிரத்து 903 பேர் தேர்வு எழுத உள்ளனர். இவர்களுக்கு, வேலூர் விஐடி பல்கலைக் கழகம், சன்பீம் பள்ளி, சிருஷ்டி பள்ளி, கிங்ஸ்டன் கல்லூரி, ஆக்சீலி யம் கல்லூரி, ஊரீசு கல்லூரி, ஸ்பார்க் மெட்ரிக் பள்ளி உள்ளிட்ட 17 மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு கண்காணிப்பாள ராக வேலூர் சரக டிஐஜி காமினி செயல்படுவார். தேர்வில் முறைகேடுகளை தவிர்க்க வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் தலைமையில் சுமார் 1,400 பேர் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 15 மையங்களில் நடைபெற உள்ள தேர்வில் ஒரு மூன்றாம் பாலினத்தவர் உட்பட 8 ஆயிரத்து 488 பேர் பங்கேற்க உள்ளனர். தேர்வு கண்காணிப்பு அலுவலராக ஐஜி அன்பு நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் தலைமையில் 700 காவலர்கள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம்

திருப்பத்தூர் மாவட்டத்தில், திருப்பத்தூர், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் ஆகிய 12 மையங் களில் காவலர்களுக்கான எழுத்துத் தேர்வு நாளை நடைபெறுகிறது. இதில், ஒரு மூன்றாம் பாலினத்தவர், 1,520 பெண்கள், 8,489 ஆண்கள் என மொத்தம் 10 ஆயிரத்து 10 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதவுள்ளனர்.

தேர்வு கண்காணிப்பு அலுவ லராக சென்னை காவலர் பயிற்சி பள்ளி ஐஜி பாஸ்கரன் நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் தலைமையில் 800 காவலர்கள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்