சேத்துப்பட்டு அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெற்றது.
தி.மலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் மற்றும் முனீஸ்வரன் கோயில் புதுப்பிக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்றது. இந்த பணி நிறைவுப் பெற்றதும், குடமுழுக்கு சிறப்பு பூஜைகள் தொடங்கின. யாக சாலை அமைத்து சிறப்பு யாகம் நடை பெற்றது. பின்னர், புனித நீர் நிரப்பப்பட்ட கலசம் புறப்பாடு நேற்று காலை நடைபெற்றது.
வேத மந்திரங்கள் முழங்க, மங்கள இசை ஒலிக்க மூல வர் விமானம் மீது இருந்த கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப் பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது. பின்னர், மகா தீபாராதனை காண்பிக்கப் பட்டது. இதைய டுத்து, மூலவர் சன்ன தியில் வழிபாடு தொடங்கியது. குட முழுக்கு விழாவில் நரசிங்கபுரம் மற்றும் சுற்றுப் பகுதி கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago