மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி எரிசக்தி துறை செயலருக்கு கடிதம்

By செய்திப்பிரிவு

மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளா் களை உடனடியாக பணிநிரந்தரம் செய்ய வேண்டுமென வலியுறுத்தப் பட்டுள்ளது.

இதுதொடர்பாக திருப்பூர் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் செயலாளர் அ.சரவணன், தமிழக எரிசக்தி துறை செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "தமிழக மின்வாரியத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணி நிரந்தரம் செய்யப்படாமல், ஏராளமானோர் ஒப்பந்தத் தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். மின்வாரியத்தில் 47 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. தற்போது 50 சதவீத பணியாளா்களை கொண்டு இயங்கும் மின்வாரியம், பணிகளுக்கு ஒப்பந்தத் தொழிலாளா்களை பயன்படுத்தி வருகிறது.

ஒப்பந்தத் தொழிலாளா்கள் மிகக் குறைந்த ஊதியத்தில் பணிபுரிகின்றனா். காலி பணியிடங்களில், பல ஆண்டுகளாக பணிபுரிந்துவரும் ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். நிஷா, ஒக்கி, வர்தா, கஜா புயல்களில் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளா்களை திரட்டியே, மின் விநியோகம் விரைந்து சரி செய்யப்பட்டது. இன்றும் ஆயிரக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்கள், தினமும் மின் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

தற்போது, நீதிமன்ற உத்தரவை மீறி கேங்மேன் பணி நியமனம் தொடர்பாக முயற்சிகளை மேற்கொண்டு வருவதை மின்வாரியம் நிறுத்தி, தமிழகம் முழுவதும் உள்ள ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்