அட்டைப் பெட்டிகள் விலையை உயர்த்த சங்கத்தினர் முடிவு

By செய்திப்பிரிவு

தென்னிந்திய அட்டைப் பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க (கோவை மண்டலம்) நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், திருப்பூரில் நடைபெற்றது.

சங்க மண்டலத் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். கரோனா பாதிப்புக்கு பிறகு அட்டைப்பெட்டி தொழில் மற்றும் மூலப் பொருட்களின் விலை உயர்வு குறித்து ஆலோசிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களில் அட்டைப்பெட்டி உற்பத்திக்கான மூலப்பொருட்களின் விலை 25 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. அடுத்து வரும் மாதங்களிலும் இதேபோல விலை உயர வாய்ப்புள்ளது.

எனவே, அட்டைப்பெட்டிகளின் விலையையும் அதற்கேற்ப உயர்த்த வேண்டுமென முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருப்பூரிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பின்ன லாடைகள் வெளிநாடுகள், வெளிமாநிலங்களுக்கு அட்டைப்பெட்டிகள் மூலமாகவே அனுப்பிவைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்