கொல்கத்தா பெண்ணுக்கு ஆம்புலன்ஸில் பிரசவம்

By செய்திப்பிரிவு

கொல்கத்தாவை சேர்ந்த ஜின்னா தலி முல்லா (28). இவரது மனைவி தன்ஜீலா (22). தம்பதிக்கு இரண்டு குழந்தைகள்.

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே நல்லிகவுண்டம்பாளையத்தில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இதற்கிடையே, தன்ஜீலா மீண்டும் கர்ப்பமடைந்தார். நேற்று முன்தினம் இரவு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அளிக்கப்பட்ட தகவலின்பேரில் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, திருப்பூர் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பணியில், ஆம்புலன்ஸில் இருந்த மருத்துவ உதவியாளர் அஜித், ஓட்டுநர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் ஈடுபட்டனர்.

சிவன்மலை அருகே தன்ஜீலாவுக்கு பிரசவ வலி அதிகமானது. இதையடுத்து ஆம்புலன்ஸில் பிரசவம் பார்க்கப்பட்டது. இதில் ,அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. தாய் மற்றும் குழந்தை இருவரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்