ஆத்தூர் நீர்த்தேக்கம் நிரம்பியதால் திண்டுக்கல் நகருக்கு அடுத்த ஆண்டு இறுதி வரை குடிநீர் வழங்க முடியும் என அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம் நிரம்பி வழிகிறது. உபரி நீர் குடகனாறு ஆற்றில் செல்கிறது. ஆத்தூர் நீர்த்தேக்கத்தை வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் நேற்று நேரில் பார்த்தார். பின்னர் அவர் கூறியதாவது:
ஆத்தூர் நீர்த்தேக்கம் முழுமையாக நிரம்பியுள்ளது. இதனால் திண்டுக்கல் நகருக்கு தினமும் 12 மில்லியன் லிட்டர் குடிநீர் என்ற அளவில் 2021 டிசம்பர் 31 வரை குடிநீர் வழங்க முடியும் என்றார்.
அப்போது திண்டுக்கல் ஆட்சியர் மு.விஜயலட்சுமி, மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராசு, கோட்டாட்சியர் உஷா, திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணி ஆகியோர் உடன் இருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago