சிவகங்கை மாவட்டத்தில் புரெவி புயலால் 10 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மிளகாய், வெங்காயம் சேதமடைந்துள்ளதாக தோட்டக்கலை துறையினர் தெரிவித்தனர்.
சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம், இளையான்குடி, காளையார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் மிளகாய், வெங்காயம் உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்நிலையில் புரெவி புயலால் அப்பகுதியில் மிளகாய், வெங்காயம் பயிர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
புயலால் பாதிக்கப்பட்ட பகுதி களில் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறி வித்திருந்தார்.
இதையடுத்து தோட்டக்கலை கூடுதல் இயக்குநர் தமிழ்வேந்தன், துணை இயக்குநர் அழகுமலை, உதவி இயக்குநர்கள் சந்திரசேகர், ரேவதி, தர்மர் உள்ளிட்ட அதிகாரிகள் திருப்புவனம், இளையான்குடி, காளை யார்கோவில் பகுதிகளில் பயிர் சேதத்தைப் பார்வையிட்டனர்.
பின்னர் கூடுதல் இயக்குநர் தமிழ்வேந்தன் செய்தியாளர் களிடம் கூறியதாவது: சிவ கங்கை மாவட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கரில் மிளகாயும், 125 ஏக்கரில் வெங்காயமும் பாதிக்கப்பட்டுள்ளது. சேதப் பாதிப்பு ஆய்வு குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும். இதே போல் மாவட்ட நிர்வாகமும் தனியாகப் பாதிப்பு குறித்து அறிக் கை அனுப்பும். அதன் பிறகு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும், என்று கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago