நியாவிலைக் கடைகளில் முன்னுரிமையற்ற குடும்ப அட்டைதாரர் களுக்கு கொண்டைக்கடலை வழங்காததால் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பலரும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டனர்.
அவர்களுக்கு உதவும் வகையில் நியாயவிலைக் கடைகள் மூலம் ஒரு மாதம் மட்டும் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் தலா ரூ.1,000-த்தை தமிழக அரசு வழங்கியது.
அதேபோல் 3 மாதங்களுக்கு அரிசி, துவரம் பருப்பு, பாமாயில், சர்க்கரை ஆகியவற்றை இலவசமாக வழங்கியது. மேலும் மத்திய அரசு சார்பில் ஏப்ரல் முதல் நவம்பர் வரை நபருக்கு தலா 5 கிலோ அரிசி இலவசமாக வழங் கப்பட்டது.
இந்நிலையில் நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும் வகையில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள முன்னுரிமையுள்ள குடும்ப அட்டைதாரர்கள் (பி.எச்.எச்.), அந்தியோதயா அன்னயோஜனா திட்ட பயனாளிகள் ஆகியோருக்கு தலா ஒரு கிலோ கொண்டைக்கடலை வீதம் 5 மாதங்களுக்குக் கணக்கிட்டு மொத்தம் 5 கிலோ இலவசமாக டிசம்பரில் வழங்க மத்திய அரசு உத்தர விட்டது.
இதனால் கொண்டைக்கடலை கிடைக்காத முன்னுரிமையற்ற குடும்ப அட்டைதாரர்கள் (என்.பி.எச்.எச்) அதிருப்தி அடைந்துள்ளனர்.
இது குறித்து என்.பி.எச்.எச். குடும்ப அட்டைதாரர்கள் கூறிய தாவது:
என்.பி.எச்.எச். குடும்ப அட்டைகளுக்கு கொண்டைக் கடலை தர மறுக்கின்றனர். இதனால் எங்களது அட்டைகளையும் பி.எச்.எச்.யாக மாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பொதுவிநியோகத் திட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பி.எச்.எச். அட்டைதாரர்களுக்கு மட்டுமே அரசு கொண்டைக் கடலை ஒதுக்கியுள்ளது. கொண்டைக்கடலை வழங்காத அட்டைகளுக்கு துவரம் பருப்பு வழங்க உத்தரவிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago